சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் – GMOA

283 0

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர், நவீன் டி சொய்சா, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால், கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காமல் மக்கள் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளைத் தொடர முடியாது என தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியைத் தக்க வைத்துக்கொள்ளவும் முகமூடி அணிவது மற்றும் கைகளைக் கழுவுவதை மக்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால், அது அவர்களின் குடும்பங்கள் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது புத்தாண்டுக்குப் பின்னர் கொரோனா பரவலைக் குறைக்க உதவும் எனவும அவர் மேலும் தெரிவித்துள்ளார்.