கோவை மாவட்டத்தில் 18 முதல் 19 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 18,492 ஆகும்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 20-ந் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து துணை வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.
அதன்படி 10,279 ஆண்கள், 10,546 பெண்கள், 19 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 20,844 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 18 முதல் 19 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 18,492 ஆகும்.
உயிரிழப்பு முகவரி மாற்றம் மற்றும் இரட்டைப் பதிவு போன்ற காரணங்களால் 1,560 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
மேட்டுப்பாளையம் தொகுதியில் ஆண்கள் 1,43,702 , பெண்கள் 1,53,128, மூன்றாம் பாலினத்தவர்கள் 40 பேர் என மொத்தம் 2 லட்சத்து 96 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர்.
சூலூர் தொகுதியில் 1,55,035 ஆண்கள், 1,62,063 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் 26 பேர் என மொத்தம் 3 லட்சத்து 17 ஆயிரத்து 124 வாக்காளர்கள் உள்ளனர்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் 2,32,142 ஆண்கள், 2,32,990 பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 96 பேர் என மொத்தம் 4 லட்சத்து 65 ஆயிரத்து 228 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை வடக்குத் தொகுதியில் 1,70,463 ஆண்கள், 1,68,147 பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 38 பேர் என மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரத்து 648 வாக்காளர்கள் உள்ளனர்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் 1,61,915 ஆண்கள், 1,64,783 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 81 பேர் என மொத்தம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 779 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை தெற்குத் தொகுதியில் 1,26,158 ஆண்கள், 1,26,571 பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 24 பேர் என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 753 பேர் உள்ளனர்.
சிங்காநல்லூர் தொகுதியில் 1,61,579 ஆண்கள், 1,63,625 பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 26 பேர் என மொத்தம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 230 பேர் உள்ளனர்.
கிணத்துக்கடவு தொகுதியில் 1,60,514 ஆண்கள், 1,66,312 பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 42 பேர் என மொத்தம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 868 பேர் உள்ளனர்.
பொள்ளாச்சி தொகுதியில் 1,08,852 ஆண்கள், 1,18,159 பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 38 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 49 பேர் உள்ளனர்.
வால்பாறை தொகுதியில் 98,667 ஆண்கள், 1,06,795 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 479 வாக்காளர்கள் உள்ளனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியலின் அடிப்படையில் மாவட்டத்தில் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 பேர் இருந்தனர். தற்போது வாக்காளர் எண்ணிக்கை 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.