ஆப்கானிஸ்தானில் விமான நிலைய பெண் ஊழியர்கள் 5 பேர் சுட்டுக்கொலை

677 0

201612180215585357_gunmen-in-afghanistan-kill-5-female-airport-employees_secvpfஆப்கானிஸ்தானில் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த 5 பெண் ஊழியர்களும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காந்தஹார் நகர விமான நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர்கள் 5 பேர் நேற்று காலை ஒரு மினி வேனில் வழக்கம் போல பணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அந்த மினி வேன் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.இதில் வேனில் இருந்த 5 பெண் ஊழியர்களும் கொல்லப்பட்டனர். வேனை ஓட்டி வந்த டிரைவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக காந்தஹார் கவர்னரின் செய்தி தொடர்பாளர் சமீம் கபுல்வாக் கூறும்போது, “காந்தஹார் விமான நிலையத்தில் பெண் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கிற பொறுப்பில் இருந்து வந்த 5 பெண் ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்” என்றார்.

காந்தஹார் விமான நிலையத்தின் இயக்குனர் அகமதுல்லா பைஸி கூறுகையில், “வேலை பார்க்கிற பெண்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பெண்கள் வேலை பார்ப்பதை விரும்பாத கும்பல், இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறது” என்றார்.நேற்றைய தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.இருப்பினும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது தலீபான் அமைப்பினர்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், இந்த தாக்குதலையும் அவர்கள்தான் நடத்தி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.