பொலன்னறுவ – நவ நகர பிரதேசத்தில் உள்ள வீடோன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த காவற்துறை கான்ஸ்டபில் பயணித்ததாக கூறப்படும் உந்துருளி மீட்கப்பட்டதையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த உந்துருளியானது நேற்று மின்னேரிய குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த கொலை தொடர்பில் சிறப்பு விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறை பிரிவினரே குறித்த உந்துருளியை மீட்டுள்ளதாக காவற்துறை ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த காவற்துறை கான்ஸ்டபில் எனவும், 49 வயதுடைய இவர் பொலன்னறுவ – திவுலன்கடவல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலை தொடர்பிலும் மீட்கப்பட்ட உந்துருளி தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.