ஸ்புட்னிக் வி கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

274 0

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இலங்கையின் சனத்தொகையில் 14 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதன் ஆரம்ப கட்டமாக 05 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய ரஷ்ய தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி இலங்கையில் அவசர பயன்பாட்டுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கு அமைய ஏழு மில்லியன்  ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்து.