யாழ்.மாநகர சபை மேயர் மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தலில்

310 0

கொரோனா தொற்று உறுதியாகிய ஒருவர் கலந்துகொண்ட திருமண வைபவம் ஒன்றில் கடந்த 20.03.2021ஆம் திகதி நெல்லியடியில் தான் கலந்து கொண்டமையால் தன்னை உடனடியாக சுய தனிமைபடுத்திக் கொள்வதோடு பிசிஆர் பரிசோதனையும் செய்துகொள்வதாக யாழ்.மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

“என்னோடு இக்காலப் பகுதியில் தொடர்பு கொண்ட நபர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் இன்றைய தினம் நடைபெறவிருந்த மாநகரசபையின் விசேட கூட்டம் இரத்து செய்யப்படுகின்றது என்பதையும் அறியத் தருகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.