அளுநர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் – வட மாகாண சபை

324 0

sivagnanamஅனைத்து மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களையும் குறைக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக வடமாகாண சபை தெரிவித்துள்ளது.

வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ வி கே சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யோசனையை புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஆளுநர் நியமனத்திற்கு எந்த வித எதிர்ப்பும் வெளியிடப்போவதில்லை எனவும் சீ வி கே சிவஞானம் குறிப்பிட்டார்.