சிறீலங்காவின் புதிய பயங்கரவாதத் தடைச்சம் தொடர்பாக ஐநா கவலை!

481 0

una-mccauleyசிறீலங்கா அரசாங்கத்தினால் வரையப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபின் சில பிரிவுகள் குறித்து ஐநா கவலை வெளியிட்டுள்ளது.

சிறீலங்காவின் ஐநா வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி கருத்துத் தெரிவிக்கையில், சட்டவாளர் இல்லாத நிலையில், ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதிக்கும் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் தொடர்பாக ஐநா கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பல விடயங்கள் தொடர்பாக கரிசனை எழுப்பியுள்ளோம். சட்டவாளர் இன்றி ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது, அனைத்துலகச் சட்ட நியமங்களின் படி 48 மணிநேரமாக உள்ள ஆரம்ப தடுப்புக்காவலை, 72 மணித்தியாலங்களாக அனுமதிப்பது போன்ற புதிய விடயங்கள் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.