வவுனியாவில் இரு மலசலகூடங்களை காணவில்லை

316 0

வவுனியாவில் இரு மலசலகூடங்களை காணவில்லை அதனை ஆக்கிரமித்து வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது இதனால் நகரிலுள்ளவர்கள் மலசலகூடங்களுக்கு செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் நகாசபைக்கு சொந்தமான மலசலகூடம் எவ்வாறு காணாமல் போயுள்ளது ? அந்த மலசலகூடங்களை மீட்டுத்தருமாறும் மக்கள் கோருகின்றனர் .

வவுனியாவில் முன்னாள் நகர பிதா ஜி.ரி.லிங்கநாதன் கடமையாற்றிய போது குறித்த இரு மலசலகூடங்களும் நகரில் அமைந்திருந்தது அதன் பின்னர் மெல்ல மெல்ல அப்பகுதியிலுள்ளவர்களினால் அக்காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு , மலசலகூடங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு நகரில் இரு முக்கியத்துவம் மிக்க பகுதிகளான கந்தசாமி கோவில் வீதி அருகே வர்த்தக நிலையம் அமைந்துள்ள பகுதி முன்னர் மலசலகூடமாக மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அத்துடன் ஹொறவப்பொத்தான வீதி சூசைப்பிள்ளையார் குளம் சந்திக்கு அருகே அமைக்கப்பட்ட மலசலகூடமும் காணாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு நகரில் காணப்பட்ட நகர சபைக்கு சொந்தமான இரு மலசலகூடங்கள் காணாமல் போயுள்ளதுடன் அதன் காணிகளும் தனியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு தடவைகளும் நகரை பொறுப்பேற்பவர்களினால் இவ்வாறு ஒவ்வொரு காணிகளும் நகர சபைக்கு சொந்தமான இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது . எனவே இவ்வாறு நகர சபையின் கட்டுப்பாட்டிலிருந்த மலசல கூடங்களை மீட்டு நகரிலுள்ளவர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படுவதற்குரிய நடவடிக்கையை எடுக்குமாறும் மேலும் கோரப்பட்டுள்ளது .