கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா – 5 உயிரிழப்புக்களும் பதிவு!

502 0

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 514ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவர்களில் 87 ஆயிரத்து 58 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 905 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 410 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வேவுட, நுகதலாவ, கடவத்த, பண்டாரகம மற்றும் காலி ஆகிய பிரதேசங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன என்பதுடன், 78, 68, 51, மற்றும்  80 வயதுடைய ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 551ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.