புதிய கூட்டணியை உருவாக்க ஐ. ம. ச. தயார் – சஜித்

280 0

பல கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்று அதன் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாரும் நினைக்காத அல்லது நம்பாத ஒரு வரலாற்று கூட்டணி உருவாகி வருகின்றது. யாரும் நம்பாத கட்சிகளின் கூட்டணியுடன் பயணிக்கத் தயாராகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்