பயணச்சீட்டு வழங்காத தனியார் பேரூந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தில் தனியார் பேரூந்துகளில், பயணிகள் போக்குவரத்து செய்யும் போது பயணச்சீட்டு வழங்காத பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை கூறியுள்ளது.
பொதுப் போக்குவரத்து பேரூந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமானது என்றும் அதிகாரசபையின் தலைவர் துசித ருவன் வணிகரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து பேரூந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பயணச்சீட்டு பெற்றுக் கொள்வது அவர்களின் உரிமை என்றும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு நடந்துகொள்ளத் தவறும் பேரூந்துகள் தொர்பில் அதிகாரசபைக்கு அறியத் தருமாறும் துசித ருவன் வணிகரத்ன கூறியுள்ளார்.