ஊவா மாகாணத்தில் ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள்

248 0

ஊவா மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல் மற்றும் பஸ் வண்டிகளுக்கு இடையில் போட்டித் நிலைமைகளினால் விபத்துக்கள் சம்பவிப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர்அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

கவயீனத்துடன் சாரதி வாகனத்தை செலுத்தியமையே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவித்த அவர், விபத்து நடந்த இடத்திற்கு அருகிலிருந்த உடல் மற்றும் சுற்றுச்சூழல் சான்றுகள் ஓட்டுநரால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதைக் காட்டுகின்றது என்றார்.

இவ்வாறான வாகன விபத்துக்கள் நெருக்கடியாக அமைந்திருப்பதாக அவர் கூறினார்.

மொனராகலை – பதுளை வீதியில் 13 ஆவது மைல்கல் என்ற இடத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 33 பேர் காயமடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 30 பேர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பதுளை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கருணாரட்ன குறிப்பிட்டார்.

அவர்களில் 16 பேர் பெண்களாவர். காயமடைந்த 14 ஆண்களும் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் 03 சிறார்களும் அடங்குகின்றனர்.

பலத்த காயமடைந்த இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார். 7 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்

காயமடைந்தவர்களில் ஐந்து பிள்ளைகளும் அடங்குவதாக அவர் கூறினார். காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

பசறை லுணுகலை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இதேவேளை இன்று இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்காக தலா 55 000 ரூபா ஆயிரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் 30 ,000 ஆயிரம் ரூபாவை ஊவா மாகாண ஆளுநர் அலுவலகமும் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் வழங்கவுள்ளன. இதற்கு மேலுதிகமாக தலா 30 ,000 ஆயிரம் ரூபா வீதம் இறுதி சடங்கு செலவுக்காக வழங்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த பஸ் எதிரே வந்த லொரியொன்றை கடந்த செல்ல முற்பட்ட போது வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.