பம்பலப்பிட்டி, புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனை, அவரது உறவினர்கள் மற்றும் பொலிஸார் என பலரும் தேடி வந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு 10 மணியளவில் அவர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மாணவனின் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லையென குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக மாணவன் கூறியுள்ளதாவது, “தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதன் காரணமாகவே வீட்டை விட்டு சென்றேன்.
ஆனாலும் வீட்டுக்கருகிலேயே இவ்வளவு நாட்களும் இருந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.