பொதுப் போக்குவரத்து நிறுவனங்களுக்கான கடன் மற்றும் குத்தகை நிவாரண பொதியின் கால எல்லையை நெடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
தொற்று காரணமாக வணிகர்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் நபர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் தடைகளை கருத்தில் கொண்டு, கால எல்லையை மேலும் 06 மாதங்களுக்கு நீடிக்க கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அத்தகைய கடனை பெற்றுகொண்டவர்கள் 2021 ஏப்ரல் 19 அல்லது அதற்கு முன்னர் குத்தகைத் தவணைகளை ஒத்திவைக்க எழுத்து மூலமாகவோ அல்லது ஒன்லைன் மூலமாகவோ கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சலுகைக்கு தகுதியான நிவாரணதிற்கு அபராதம்விதிப்பதையும் நிதி நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற தகுதியான நிதி நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தொடர்புடைய சுற்றறிக்கைகள் www.cbsl.gov.lk இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.