யேர்மனியில் நடனக் கலைபயில்வோருக்குகளம் அமைத்துக் கொடுத்து,அவர்களது திறமைகளைவெளிக்கொண்டுவரும் நோக்கில் நாடுதழுவியரீதியில் வாகைமயில் என்னும் மாபெரும் பரதநாட்டியநடனப் போட்டிகடந்த 10.12.2016 அன்று வூப்பெற்றால் நகரில் வூப்பர் மண்டபத்தில் தமிழ் பெண்கள் அமைப்பினரால்ஒழங்குசெய்யபட்டு வெகுசிறப்பாக நடாத்தப்பட்டது.
தமிழ்க் கலைக் கூடங்கள்,மற்றும் நடனக் கலைபயில்வோர் தமதுகலை ஆற்றல்களைவெளிப்படுத்தும் நோக்கில் 150 இற்கு மேற்பட்டநடனக் கலைஞர்கள் இப்போட்டியில் பங்குபற்றிசிறப்பித்திருந்தனர்.
ஆரம்பப்பிரிவு,கீழ்ப்பிரிவு,மத்தியபிரிவு,மேற்பிரிவு,அதிமேற்பிரிவு எனவயதுப்பிரிவிற்குஏற்பபிரிக்கப்பட்டுதனிநடனம்,குழுநடனம் எனபோட்டிகள் நடாத்தப்பட்டன. அத்துடன் நாட்டியநாடகமும் போட்டி நிகழ்வாகநடைபெற்றது.
அரங்குநிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் வெகுசிறப்பாகநடைபெற்ற இம் மாபெரும் நடனப்போட்டியில் பங்குபற்றிய அனைத்துகலைஞர்களுக்கும் சான்றிதழும்,பதக்கமும் வழங்கிமதிப்பளிக்கப்பட்டது. வெற்றிபெற்ற கலைஞர்களுக்குவிருதுகளும்,அதிசிறந்தநடனக் கலைஞர்களுக்கு வயதுப்பிரிவுப்படி வாகைமயில் விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.