uyarமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை மீதான வரிகளை குறைப்பதன் மூலம், அதன் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதன் மூலம் அரசாங்கம் 15.9 பில்லியன் ரூபாயை இழந்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் மீதான வரியை குறைத்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு 15.9 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டமை தொடர்பில் அவர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சீனி இறக்குமதி மீதான வரியை 25 சதங்கள் வரையில் குறைத்ததன் ஊடாக இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு நெருக்கமான வியாபாரிகளுக்கு சலுகை வழங்கும் விதமாக இவ்வாறு வரி குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.