சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு

326 0

ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார். ஆன்லைன் மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும், வாக்கெடுப்பும் நடந்தது. அவர் 2025-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார்.

தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தாமஸ் பேச், கொரோனா கட்டுபாடுகள் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23-ந்தேதி தொடங்கும் என்று மீண்டும் உறுதிப்பட கூறினார்.