வடக்கு மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்திலும் 6 பேர் வவுனியா மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டடார்.
யாழ். மாவட்டத்தில் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரிபிரிவைச் சேர்ந்த 3 பேரும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவருக்கும் யாழ். நகரில் கடை வைத்திருக்கும் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேலும் 5 கைதிகளுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்
இதேவேளை வெளிநாடு செல்வதற்காக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்ட மூவர் உட்பட வவுனியா பொது வைத்தியசாலையில் 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செட்டிக்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முறிகண்டியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.