சட்டரீதியான பிரச்சினைகளின் தீர்வின் பின்னர் – மாகாண சபைத் தேர்தல்

233 0

தற்போது நிலவும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்திற்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.