அம்பாந்தோட்டை சம்பவம் – சிறிலங்கா கடற்படையின் அறிக்கை பாதுகாப்புச் செயலரிடம் கையளிப்பு

264 0

navy-commander-attack-journalist-280x186அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

வேலை நிறுத்தம் செய்யும் துறைமுகப் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வெளிநாட்டுக் கப்பல்களை விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா கடற்படைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பான விரிவான அறிக்கையை சிறிலங்கா கடற்படை நேற்று தம்மிடம் கையளித்தது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.

முதலில் இந்த அறிக்கையைத் தாம் படிக்க வேண்டும் என்றும், அதற்குப் பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.