அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவால் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 ஆண்டுகள் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுக ஊழியர்கள் போராட்டம் நடாத்திக்கொண்டிருந்தவேளையில் கடற்படைத் தளபதி சிவிலுடையில் துறைமுக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த சமயம், அங்கு செய்திசேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான காணொளி ஊடகங்களில் வெளியாகியதுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.