ஜனவரியில் நாடு பரபரப்பாக இருக்கும் – ஜேவிபி

322 0

anurakumaraஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பேரணிகளால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு பரபரப்பாக காணப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டின் துறைமுகம், காணி மற்றும் இயற்கை வளங்களை அரசாங்கம் விற்பனை செய்கிறது.

இவ்வாறு நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக போராடுவதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.