நிறைவேற்று அதிகார ஜனாதிபதி – தெளிவு வேண்டும்

244 0

g-l_-peiris_1நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என மகிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தலைவர் ஜீ எல் பீறிஸ் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இதனை கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக உறுதியளித்திருந்தது.

ஆனால் தற்போது வேவ்வேறு நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

அரசாங்கம் உண்மையில் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குகிறதா? அல்லது தொடர்ந்தும் பேணவுள்ளதா? என்பது தொடர்பில் விளக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.