வாக்குறுதிகளை அரசாங்கம் அடுத்த வருடம் நிறைவேற்றும் – பிரதமர்

301 0

21-1440138066-ranil56அரசாங்கம் தனது வாக்குறுதிகளை அடுத்த ஆண்டில் நிறைவேற்றும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க உறுதியளித்துள்ளார்.

த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அரசியல் ரீதியான ஒற்றுமைகளை நிலைப்படுத்தல் மற்றும் மனித உரிமைகள் குறித்த விடயங்கள் என்பன அடுத்த 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து, நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்து, பல்வேறு வேலை திட்டங்களை முன்கொண்டு செல்கின்றது.

தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய தருணத்தில் அரங்கம் உள்ளது.

அதற்காக அரசாங்கம் அனைத்து வகையிலும், தயாரான நிலையிலேயே உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.