வடக்கில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பமானது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை

225 0

இன்று ஆரம்பமாகும் க.பொ.த சாதாரணப் பரீட்சையில. வடக்கு மாகாணத்தில் 44,245 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் முக கவசம் அணிந்து பரீட்சை மண்டபத்திற்கு செல்லும் முன்னர் கைகள் கழுவி கிருமி தொற்று நீக்கி திரவம் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்

வடக்கு மாகாணத்தில் தோற்றும் 44 245 மாணவர்களில் 23 679 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 20 566 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றனர்.

இவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 11 352 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 11 130 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 22 482 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 392 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 74 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 5 466 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 919 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 1855 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 4 774 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் 3 771 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 860 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 6 631 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுகின்றும் அதேவேளை

மன்னார் மாவட்டத்தில் 2 245 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 4 892 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.