கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி (காணொளி)

388 0

kil-disebleகிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனியும் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டமாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டிய விழிப்புணர்வு நடை பவனியும் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்ட மாற்றத்திறனாளிகள் சங்கத்தின் கண்டிகப் இன்ரநசனல் நிறுவனம் மற்றும் காவேரி கலாமன்றம் ஆகியவற்றின் அனுசரணையுடன் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.நிகழ்வுகளில் முன்னதாக கிளிநொச்சி டிப்போச்சந்தியில் இருந்;து மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் உரிமைகளை வலியுறுத்திய விழிப்புணர்வு பேரணி ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபம் வரைசென்று அங்கு மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் ஆ.சிவநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.நிகழ்வுகளைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், வடக்கு மாகான முதலமைச்சர் ஆகியோருக்கான மகஜர்கள் பாராளமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டன.

இதன்போது மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உரிய தினத்தில் மட்டும் இனங்கண்டுகொள்ளாது தொடர்ந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா கேட்டுக்கொண்டார்.