ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் உள்ள வித்தியாலயம் ஒன்றின் அதிபர் ஒருவர் மீது கும்பல் ஒன்று பலத்த தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளதால் தாக்குதலுக்கு உள்ளான வித்தியாலயத்தின் அதிபர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (27) இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ மோரா தோட்டபகுதிக்கு சென்று இம் முறை கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை சந்தித்து வீட்டுக்கு சென்ற வேலையில் மோரா தோட்டபகுதியில் வைத்து நான்கு பேர் கொண்ட குழுவினரால் குறித்த அதிபர் தாக்கப்பட்டதில் இரண்டு கால்கள் மற்றும் தலை பகுதியில் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் குறித்த அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுல்லதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்யும் நடவடிக்கையில் பொகவந்தலாவ பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த பாடசாலைக்கு குறித்த அதிபர் புதிதாக நியமிக்கப்பட்ட காலப்பகுதியில் அதிபரை பலிவாங்கும் நோக்கில் தரம் 01 வகுப்புக்கு உரிய விளையாட்டு இல்லத்தினை தீ வைத்து கொழுத்திய சம்பவம் இடம் பெற்று இருந்தமையும் குறிப்பிடதக்கது.
அதிபர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான அதிபர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதி விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.