கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் கைது

368 0

id-720x480உந்துருளிகளில் சென்று நாட்டின் பல பகுதிகளில் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையிட்டு  வந்த முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலுள்ள காவற்துறை நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

கைதானவர்களிடமிருந்து தங்க சங்கிலிகள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்கள் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.