விபத்தில் இளைஞர் பலி

261 0

batti-acci-190316-seithy-1கேகாலை – பொல்கஹவெல பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.

குறித்த இளைஞர் பயணித்த உந்துருளி முச்சக்கர வண்டி மற்றும் பேருந்தில் மோதுண்டதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அலவ்வ பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே பலியானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.