வெளிநாட்டு செலாவனியை குறைத்து உள்ளூர் மூதலிட்டாளர்களின் ஊக்குவிப்புக்களை பொருளாதார ரீதியான தொழில் நிர்பந்தமான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என நிதி மூலதன சந்தை அரசதொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
நாட்டின் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது பொருளாதார ரீதியான பின்னடைவுகள் எற்பட்டுள்ளது. அதற்கான புதிய வசதிகளூடான தொழில் முயற்சிகளை எற்பட்டுத்துவதற்கும் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். குறிப்பாக பல்கலைக்கழங்களில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் அதிகம் உள்ளனர்.
தொழில்வாய்ப்பு அற்ற நிலையில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க, அரசதொழில் முயற்சி மறுசீரமைப்பினை விரிவுபடுத்தவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பீட பேராசிரியர்கள், நிர்வாக அலகு அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்று யாழ் பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
இவ் சந்திப்பில் கலந்துகொண்ட நிதி மூலதன சந்தை அரசதொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்தார்.
இங்கு பல்கலைக்கழகத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள், மாணவர்களுக்கு தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்காக திட்ட முன்மொழிவுகள் பற்றியும் விவசாயம், முகாமைத்துவம், வர்த்தகம், மருத்துவம், நிதி முகாமைத்துவம் துறைசார்ந்த பேராசிரியர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித் தலைவரும் மாவட்ட இணைத்தலைவர் ஆகிய அங்கஜன் இராமநாதன், நிதி மூலதன சந்தை அரசதொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் உயர்அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.