காங்கேசன்துறை தாவடி வீதியில் வாகன விபத்து (காணொளி)

358 0

thavady யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தாவடி வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.யாழ்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த விற்பனை வாகனமொன்றும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தின் நிறுத்தற்கருவி இல்லாமையினால் பின்னால் பயணித்த விற்பனை வாகனத்துடன் மோதியதாக அறியமுடிகின்றது.விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.