யேர்மனி பொண் நகரில் அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக நடபெற்ற ஆற்பாட்ட ஒன்றுகூடல்.

1154 0

Germany Bonn நகரில் அபிவிருத்தி அமைச்சிற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும் மகஜர் கையளிப்பும்.

மத்திய மாநிலத்திலிருந்து தமிழ்மக்கள் ஒன்றுகூடி தமிழீழத்திற்கான நீதி கோரி தங்களது கோசங்களை எழுப்பியும் யேர்மன் மொழியில் உரைகளை ஆற்றியும் , பதாதைகளை தாங்கியும் தங்களுடைய நிலைப்பாட்டை எடுத்துக்கூறியிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை விவகாரத்தில் யேர்மன் அரசாங்கம் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், எம்மக்களுக்கு நடந்தது இனப்படுகொலைதான் என்பதை உறுதிசெய்யவேண்டும் என்றும், நடந்த போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அபிவிருத்தி அமைச்சுடன் எமது பிரதிநிதிகள் பேச்சுக்களை நடத்தி எம்மக்களின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறி யேர்மன் அரசினால் ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் ஏனைய உதவித்திட்டங்கள் அனைத்தும் சிங்களப்பகுதிகளுக்கே சென்றடைகின்றது என்றும் அங்கும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதையும் எடுத்துக்கூறியுள்ளனர்.

அபிவிருத்தி அமைச்சிலிருந்து எமது பிரதிநிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கையில் இரண்டு தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு (BMZ) மட்டுமே உதவுவதாகவும் தொடர்ந்தும் இலங்கைக்கான உதவிகளை குறைக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே இப்படியான ஆர்ப்பாட்டங்கள் மூலமோ ஊர்வலங்கள் மூலமோ நாம் எமது நிலமையை தொடர்ந்தும் யேர்மன் அரசிற்கும் மக்களுக்கும் வெளிக்காட்டுவது அவசியம்.

இதன் அடிப்படையில் சனிக்கிழமை 27.02.2021 அன்று Karlsruhe நகரத்தில் புகையிரதநிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.
அனைத்து தமிழ் உறவுகளையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.