பல ஊழல்களுடன் தொடர்புடைய ஒருவர் இந்த நாட்டை ஆண்டிருப்தை நினைத்து தாம் மிகுந்த கவலையடைகின்றோன். – ரவி கருணாநாயக்க

306 0

download-2பல ஊழல்களுடன் தொடர்புடைய ஒருவர் இந்த நாட்டை ஆண்டிருப்தை நினைத்து தாம் மிகுந்த கவலையடைவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.நாட்டின் பொது வளத்தை விற்பனை செய்ததும் வீண்விரயம் செய்ததும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே, இப்படிப்பட்ட ஒருவர் எமது நாட்டை ஆண்டிருக்கின்றார் என்பதை நினைத்து தாம் மிகுந்த கவலையடைவதாக குறிப்பிட்டார்.

கொழும்பு நகரத்திட்டமிடல், போர்ட் சிட்டி, சில நிறுவனங்களை விற்றும், துறைமுகங்களை விற்றும், கடன்களை பெற்றும் நாட்டை படுகுழியில் தள்ளியவர் மஹிந்தவே.துறைமுகங்களை அரசு விற்பனை செய்வதாக மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் முகமாகவே நிதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதுவரை கண்டது எதுவும் இல்லை இனிமேல் நீங்கள் பார்க்கப்போவதுதான் நல்லாட்சியின் உண்மையான வேலைத்திட்டங்கள்.இந்த 2 வருடங்களாக வேலைத்திட்டங்கள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டன. இதனால் நன்மைகள் வெளியில் விளங்கியிருக்க வாய்ப்பில்லை.

தற்போது வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. இனிமேல் அனைவரும் அதற்கான பலனை அனுபவிப்பீர்கள் எனவும் குறிப்பிட்டார்.கடந்த தேர்தலின்போது மத்திய வங்கியிலிருந்து பணம் வெளியே சென்றதாகவும், அது தொடர்பாக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதன் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும்  ஹம்பாந்தோட்டையில் ஈட்டப்படும் மூலதனத்தை கொழும்பு துறைமுகத்தினூடாக பெறுவதற்கே இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் அரசும் தனியாரும் சேர்ந்து செயற்படும் நிலை ஏற்படும் என்றும் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.