இலங்கையுடனான வர்த்தக பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமெலி ரஹ்மான் தெரிவித்தார்.
இலங்கையின் தேயிலை, ஆடை, இரத்தினக்கல், ஆயுள்வேத உற்பத்திகள், வாசனைத் திரவியங்கள், பீங்கான் பொருட்கள், இறப்பர் உற்பத்திகள் என்பனவற்றை கொள்வனவு செய்வதற்கு தஜிகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற இலங்கை மற்றும் தஜிகிஸ்தான் வர்த்தக சபை உறுப்பினர்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது முதலீடு செய்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம். தஜிகிஸ்தான் வர்த்தகர்கள் இலங்கையில் விரிவாக முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட எதிர்பார்த்துள்ளனர். இலங்கை முதலீட்டாளர்களையும் எமது நாட்டிற்கு விஐயம் செய்து முதலீடுகளை மேற்கொள்ளமாறு அழைப்பு விடுக்கிறோம் எனத் தெரிவித்தார்.