நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ சீனிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலையில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைய நாட்களாக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது