பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை வழக்கில் மற்றுமொரு முக்கிய தகவல் வெளிப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தாஜூடின் கொலை செய்யப்பட்ட வேளை அவரின் வாகனத்தின் பின்னால் மற்றொரு வாகனம் சென்றிருப்பது தொடர்பில் தகவல் கிடைத்திருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.அந்த வாகனம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அப்பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன் தாஜூடின் கொலை செய்யப்பட்ட வேளை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சில தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளமை குறித்து தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.