நாட்டின் அரசியல் யாப்புடன் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்ய புதிய நீதிமன்றமொன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை அரசியல் யாப்புக்கு விளக்கம் கோரல் மற்றும் அரசியல் யாப்புடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தீர்ப்புக்களை உயர் நீதிமன்றமே வழங்கி வந்தது.
இந்த புதிய நீதிமன்ற உருவாக்கத்தின் பின்னர், உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குச் சென்ற அரசியலமைப்பு தொடர்பிலான சகல வழக்குகளும் செல்லாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பு நீதிமன்றம் என இந்த நீதிமன்றத்துக்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான நீதிபதிகள் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி நியமிப்பார் எனவும் அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.