ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாகம்புர துறைமுக ஊழியர்கள் இன்று கடமைக்கு சமூகமளிக்காது போனால், சுயமாக தமது தொழிலிலிருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.