வறட்சியின் பிடியில் சிக்கிய வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

294 0

201612141741546662_lack-of-rain-in-vellode-birds-sanctuary_secvpfஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாதலமாக இருக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தற்போது மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.

ஈரோட்டுக்கும்- சென்னிமலைக்கும் இடையே இயற்கை சூழல் நிறைந்த ஊரான வெள்ளோடு உள்ளது. வெள்ளோடு ஊர் எல்லையில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாதலமாக இந்த வெள்ளோடு பறவைகள் சரணாலயம் விளங்குகிறது.

இந்த சரணாலயத்துக்கு உள்நாட்டு பறவைகளோடு சைபிரியா, ரஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெளிநாட்டு பறவைகளும் வரும். இப்படி வரும் பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்துவிட்டு அதன் குஞ்சுகள் வளர்ந்த பிறகு மீண்டும் தாயகம் திரும்பி சென்று விடும்.

இப்படி சிறப்புமிக்க வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. சரணாலய குளத்துக்கு போதிய மழையின்றி தண்ணீர் வருகையின்றி குளம் போல் காட்சி அளிக்கிறது.

எனினும் குளத்தை சுற்றி இருக்கும் மரங்களில் இன்னும் பல வெளிநாட்டு பறவைகள் கூடுகட்டி வசித்து வருவதையும் அவை வட்டமாக சுற்றி திரிந்து பறப்பதையும் குதூகலத்துடன் பார்க்க முடிந்தது.