மட்டக்களப்பில் காணிகளை அபகரிக்கும் முயற்சி

315 0

மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடக்கரையை அன்டிய பகுதிகளில் உள்ள காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஹிஸ்புல்லாவின் பினாமிகள் மீண்டும் இறங்கியுள்ளனர்.

1979 ஆண்டு 56ஏக்கர் காணியை நிலசொந்த காரர்களிடம் இருந்து எல்.ஆர்.சி மூலம் சுவிகரித்து பொதுமக்களுக்கு 115 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்ட இடம். தமிழ் மக்கள் காலம் காலமாக பெரும்பாண்மையாக வாழ்ந்த காணிகளை ஹிஸ்புல்லாவும் பினாமிகளான முந்தாஸ் மௌலவியும், சபீக் ஆகியோர் பல நூறு ஏக்கர் அரச காணிகள், எல் .ஆர்.சிக்கு சொந்தமான காணிகளை போலியான ஆவணங்கள் தயார் செய்து பிடித்து வைத்துள்ளனர் .இது சம்மந்தமான விசார்ணைகள் சி.ஐ.டி.மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு போன்ற வற்றில் தற்போது இடம் பெற்று வரும் நிலையில் குறித்த காணிகளை தற்பொழுது மீண்டும் அபகரித்து வருகின்றனர்

ஏறாவூரில் உள்ள சின்ன லெவ்வை சபீக்.அக்பர் பள்ளி வீதி ஏறாவூர் வசிப்பவரும் மட்டக்களப்பு பிரதேச செலகத்தில் நிலப் பயன்பாட்டு திணைக்களத்தில் பணியாற்றும் ஹிஸ்புல்லாவின் பினாமிகளால் இந்த காணிகள் அபகரிக்கப்பட்டு காணி துப்பரவு செய்து வேலி அடைத்து வருகின்றனர்.

ஆனால் இதனை தடுக்காது அரச அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். மீண்டும் ஹிஸ்புல்லாவின் பினாமிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது