ஹபரன பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபான விருந்துபசாரம் ஒன்றை சுற்றிவளைத்த போது 16 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் நேற்று இரவு (21) ஹபரன காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ருந்த இந்த விருந்துபசாரம் ஹபரன வாவியை அண்மித்த விடுதியொன்றில் நடைபெற்றுள்ளது.
ஹபரன காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவினரருக்கு கிடைத்த தகவல்களின்படி இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் 29 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்ட 16 ஆண்கள் 22-28 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
அவர்கள் இன்று(22) கெகிராவை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்