தமிழக சட்டசபை தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25ந்தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை வருகிற 25, 26 மற்றும் 27 ஆகிய 3 நாட்களில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் அளிக்க வேண்டும். பொது தொகுதிகளுக்கு ரூ.5 ஆயிரம், பெண்கள் மற்றும் தனி தொகுதிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500 விருப்ப மனு கட்டணம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. அங்கம் வகிக்கிறது. எனவே கூட்டணி தொகுதி பங்கீட்டின் போது, த.மா.கா.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் விருப்ப மனு பரிசீலிக்கப்பட்டு, குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.