ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை 22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன் இலங்கை குறித்து விவாதம் ஒன்றும் நடைபெறவுள்ள நிலையில் புதிய பிரேரணை ஒன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
கோ குரூப் நாடுகளால் ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார் .
ஈழப் போர் மௌனிக்கப்பட்ட பின்னர் ஜெனீவா சமரை நோக்கி பயணிக்கிறது தமிழ் இனம்.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகின்றது ….. காணாமல் போனவர்களின் உறவுகள் பலரை காலம் காவு கொள்கிறது.
காத்திருக்கும் தமிழ் இனத்திற்கு காலம் கனிவான பதிலை வழங்குமா?