இனவாதிகளை பாதுகாப்பதற்கு தென்னிலங்கை ஊடகங்கள் முயற்சி – சீ.வி.கே.சிவஞானம்

319 0

cvk-sivagnanam1வட மாகாண சபையின் தீர்மானங்கள் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தி வெளியிடுவதன் ஊடாக சுமணரத்ன தேரர் போன்ற இனவாதிகளை பாதுகாப்பதற்கு தென்னிலங்கை ஊடகங்கள் முயற்சிக்கின்றன என மாகாண சபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குற்றம் சுமத்தியுள்ளார்.

வட மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்றைய தினம் நடைபெற்றது.

இதன்போதே அவை தலைவர் இதனை தெரிவித்தார்.

வடக்கில் மக்களின் காணிகளில் அடாத்தாக விகாரைகள் அமைக்கப்படுவதையும் சுமணரத்ன தேரர் போன்றவர்களின் செயற்பாடுகள் ஜக்கியத்திற்கு குந்தகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியிருந்தோம்.

அதனை தெற்கு ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட்டிருந்தது.

அதேபோல் வட மாகாணசபைக்கான கீதம் ஒன்றை உருவாக்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தோம்.

அதனை வட மாகாணசபை தேசிய கீதம் இயற்ற போவதாக திரிபுபடுத்தி செய்தியாக்கியிருந்தார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளை தங்கள் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தவும் சுமணரத்ன தேரர் போன்ற இனவாதிகளை பாதுகப்பதற்குமே முயற்சிக்கின்றார்கள்.

இந்த நிலையில் மாகாண சபைக்கான கீதம் உருவாக்கம் தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்களுடன் பேசியிருந்தேன்.

அப்போது

நான் கூறியிருக்கிறேன் அதாவது தேசிய கீதம் உருவாக்குவதற்கு இங்குள்ளவர்கள் பைத்தியகாரர்களாக இருக்கவேண்டும்.

ஆனால் நாங்கள் பைத்தியகாரர்கள் இல்லை எனவும் சீ.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.