சுகவீனம் காரணமாக மரணமடைந்த முல்லைத்தீவு வற்றாப்பளையை சேர்ந்த இராசதுரை திக்சனின் இறுதி நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.
திக்கனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலம் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழக மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது.
அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்த ராஜா உள்ளிட்டவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.
தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு உடலம் வற்றாப்பளை இந்து மையானத்தில் தகனம் செய்யப்பட்டது.