இலங்கையில் மறுசீரமைப்பு மற்றும் நிலைமாறு நீதிவழங்கல் வேலைத்திட்டத்துக்கான நிதி வழங்கல்களை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் உறவு பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இதற்காக 1.7 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டம் தொடர்பில் ஆர்வம் உள்ள நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.