பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு என்று புதுச்சேரி துணைநிலை கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி துணைநிலை கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* துணைநிலை கவர்னராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன்.
* தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டைக் குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது.
* பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு.
* கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது.
* கவர்னர் மற்றும் முதல்வரின் அதிகாரம் என்ன என்பது எனக்கு தெரியும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நகர்வுகளை மேற்கொள்வேன்.
* நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் அளித்த புகார் குறித்து ஆலோசித்து சட்டப்படி முடிவெடுப்பேன்.
* கவர்னரை மக்கள் எளிதில் சந்திக்கக்கூடிய வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.