ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தான் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் பிப்ரவரி 12 ஆம் தேதி ஏற்பட்டது. தஜிகிஸ்தான் நிலநடுக்கத்தால் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
நிலநடுக்க காட்சிகள் என கூறி பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புக்கு பின் எடுக்கப்பட்டவை என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை கடந்த ஆண்டு துருக்கியின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டவை என தெரியவந்தது. இதே புகைப்படங்கள் அடங்கிய செய்தி தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன.
செய்தி தொகுப்புகளில் இந்த சம்பவம் ஜனவரி 2020 ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட சம்பவம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் புகைப்படங்கள் ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.