நவாலியில் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஆட்டோவுக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தது

218 0

நவாலி அரசடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று ஆட்டோ ஒன்றுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

அந்தக் கும்பலை துரத்திச் சென்ற இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டு மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பலே இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

வன்முறைக் கும்பல் தப்பிச்சென்ற நிலையில் அந்தப் பகுதி இளைஞர்கள் துரத்திச் சென்றுள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

அந்த மோட்டார் சைக்கிள் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.